இந்தியா

#RailwayUpdate பொள்ளாச்சி - பாலக்காடு இடையே புதிய MEMU ரெயில் சேவை - ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல்

Published On 2026-03-06 15:43 IST   |   Update On 2026-03-06 15:43:00 IST
  • பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாலக்காடு-பொள்ளாச்சி வழித்தடத்தில் புதிய ரெயில் சேவைக்கான கேரளாவின் நீண்டகால கோரிக்கையை ரெயில்வே அமைச்சகம் நிறைவேற்றியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பொள்ளாச்சி - பாலக்காடு இடையே புதிய MEMU (Mainline Electric Multiple Unit) ரெயில் சேவைக்கு மத்திய ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இந்த புதிய சேவை கேரள மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளை இணைக்கும் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும், மேலும் பயணிகளின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவை தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி சமூக வலைத்தள பக்கத்தில் ரெயில்வே அமைச்சரின் கடிதத்தின் நகலை பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், ரெயில் சேவை தொடர்பான கோரிக்கையினை பரிசீலித்து பயணிகளின் வசதிக்காக உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News