இந்தியா

வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.115 உயர்வு: மக்கள் அதிர்ச்சி #LPGGas

Published On 2026-03-07 02:29 IST   |   Update On 2026-03-07 02:35:00 IST
  • எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.
  • வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 1-ம் தேதி உயர்த்தப்பட்டது.

புதுடெல்லி:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

இதற்கிடையே, மார்ச் மாதத்திற்கான வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த 1-ம் தேதி உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.29.50 உயர்ந்து ரூ.1,929-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், நள்ளிரவில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 115 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் 1768.50 ரூபாய்க்கு விற்ற வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1883 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 1929 ரூபாய்க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் 2043.50 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டது. இதனால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டு உபயோக சிலிண்டர் 60 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலை 115 ரூபாய் அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News