இந்தியா

மகள் திருமணத்திற்கு பணம் இல்லாத விரக்தி: பெற்றோர், மனைவி, மகளை செங்கலால் அடித்துக் கொன்ற நபர்

Published On 2026-01-20 16:50 IST   |   Update On 2026-01-20 16:50:00 IST
  • மகளுக்கு அடுத்த மாதம் திருமணம் முடிவு செய்யப்பட்ட நிலையில், கையில் பணம் இல்லாததால் விரக்தி.
  • குடும்பத்தினரை செங்கலால் அடித்துக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் ஏட்டா பகுதியைச் சேர்ந்தவர் கமல் சிங். இவரது மகள் ஜோதி. மனைவி ரத்னா தேவி. கமல் சிங் தனது தந்தை கங்கா சிங் (70), தாய் ஷியமா தேவி (65) ஆகியோருடன் இரண்டு மாடி கட்டிடத்தில் வசித்து வந்தார்.

மகள் தேவிக்கு அடுத்த மாதம் திருமணம் ஏற்பாடு செய்துள்ளார் கமல் சிங். ஆனால் திருமண செலவிற்கு அவரால் பணத்தை திரட்ட முடியவில்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்துள்ளார்.

பண நெருக்கடியால் குடும்பத்தினரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து செங்கலால் பெற்றோர், மனைவி, மகளை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பெற்றோர் மற்றும் மகள் ஆகிய 3 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளனர். மனைவி மற்றும் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தனது குடும்பத்தினரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு போலீசில் சரணடைந்துள்ளார். போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News