இந்தியா

கணவன்- மனைவி சண்டையில் பறிபோன 4 வயது குழந்தை உயிர்..!

Published On 2026-01-20 21:19 IST   |   Update On 2026-01-20 21:19:00 IST
  • கணவன்- மனைவி இடையிலான தகராறு கைகலப்பாக மாறியது.
  • மனைவி மீது எறிந்த கல், மகனின் தலையை பலமாக தாக்கியது.

ஆந்திர பிரதேச மாநிலம் ஆனந்தபூரில் கணவன்- மனைவி சண்டையில் பரிதாபமாக 4 வயது குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆனந்தபூரில் உள்ள லக்ஷ்யம் பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி மகேஷ்வரி. இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு அடிதடியாக மாறியது.

மனைவி மீது கடுங்கோபம் கொண்ட ரமேஷ், கல்லை எடுத்து மனைவியை நோக்கி எறிந்துள்ளார். ஆனால், கல் குறி தவறி அவரது 4 வயது மகனின் தலையை பலமாக தாக்கியது. இதில் குழந்தை படுகாயம் அடைந்தது. உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

கணவன்- மனைவி சண்டையால் 4 வயது குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News