இந்தியா

பக்தரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் அடங்கிய பையை பறித்துச் சென்ற குரங்கு.. ஷாக் சம்பவம்

Published On 2025-06-07 12:28 IST   |   Update On 2025-06-07 12:28:00 IST
  • புனித தலமான பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோயில் உள்ளது.
  • குரங்கு பணப்பையை பறித்தவுடன், உள்ளூர்வாசிகள் அதைப் பிடிக்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புனித தலமான பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோயில் உள்ளது.

உ.பி.யின் அலிகாரைச் சேர்ந்த அபிஷேக் அகர்வால் தனது குடும்பத்தினருடன் தாக்கூர் பாங்கே பிஹாரி கோயிலுக்கு நேற்று சென்றிருந்தார்.

தரிசனம் முடித்து திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று, அபிஷேக் அகர்வாலின் மனைவியின் கையிலிருந்து ஒரு குரங்கு பணப்பையை பறித்துச் சென்றது. பணப்பையில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது.

குரங்கு பணப்பையை பறித்தவுடன், உள்ளூர்வாசிகள் அதைப் பிடிக்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் சுற்றியுள்ள பகுதிகளை தேடினர். சில மணிநேர தேடுதலுக்குப் பிறகு, பணப்பை அருகிலுள்ள புதரில் கண்டெடுக்கப்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, பணப்பையில் இருந்த அனைத்து நகைகளும் பாதுகாப்பாக இருந்தன. போலீசார் அதை அபிஷேக் அகர்வாலின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பிருந்தாவன் பகுதியில் பக்தர்கள் பொருட்களை குரங்குகள் பறிப்பது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்ரீ ரங்கநாத் ஜி மந்திரில் ஒரு குரங்கு பக்தரின் ஐபோனை பறித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News