செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - உ.பி., மகாராஷ்டிரா வேட்பாளர்கள் உள்பட 2வது பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

Published On 2019-03-13 16:33 GMT   |   Update On 2019-03-13 16:33 GMT
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள நானா படோல், ராஜ் பாப்பர், பிரியா தத் உள்ளிட்ட 21 பேர் கொண்ட 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #ParliamentElection #Congress #SecondList #NanaPatole #RajBabbar #PriyaDutt
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 21 பேர் கொண்ட இரண்டாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா  மாநிலங்களில் போட்டியிடும் 21 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 16 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 பேரும் அடங்குவர்.

இதில், மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் நானா படோலும், வடக்கு மத்தியில் பிரியா தத்தும், உ.பி.யின் மொராதாபாத் தொகுதியில் ராஜ் பாப்பரும், பஹ்ரெய்ச் தொகுதியில் சாவித்ரி புலேவும் போட்டியிடுகின்றனர என தெரிவித்துள்ளது. #ParliamentElection #Congress #SecondList #NanaPatole #RajBabbar #PriyaDutt
Tags:    

Similar News