முதலில் பராசக்தியை பாராட்டி விட்டு அப்புறம் ஜனநாயகனுக்கு வாழ்த்து கூறிய ரிஷப் ஷெட்டி
- பராசக்தி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ந்தேதி வெளியாக உள்ளது.
- ஜன நாயகன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.9-ந்தேதி வெளியாக உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ந்தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் டிரெய்லர் வெளியானது.
இந்நிலையில் பராசக்தி படத்திற்கு கன்னட திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பராசக்தி டிரெய்லர் அற்புதமாக இருக்கிறது. சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாமுரளி, சுதாகொங்கரா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது ஜனநாயகன் படத்தின் டிரெய்லருக்கும் ரிஷப் ஷெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜனநாயகன் டிரெய்லர் தீயாய் உள்ளது. விஜய் சாருக்கு வாழ்த்துகள். இப்படம் மாபெரும் வெற்றியடைய படகுழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பராசக்தி டிரெய்லரை முதலில் பாராட்டி விட்டு அதற்கு முன்னதாகவே வெளியான ஜனநாயகன் டிரெய்லருக்கு ரிஷப் செட்டி தாமதமாக வாழ்த்து கூறியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.