செய்திகள்

ரபேல் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல்

Published On 2019-01-02 09:51 GMT   |   Update On 2019-01-02 11:06 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி யஷ்வந்த்சின்கா, அருண் ஷோரி, பிரசாந்த் பூ‌ஷன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனுவை தாக்கல் செய்தனர். #rafaleissue #supremecourt #YashwantSinha

புதுடெல்லி:

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் வகை போர் விமானம் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ரபேல் விமான கொள்முதலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறியும், இதனால் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி பல்வேறு பொது நல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.


இந்த மனுக்களை கடந்த 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ரபேல் போர் விமான கொள்முதல் நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் எதுவுமில்லை என்று தீர்ப்பளித்தது.

கொள்முதல் நடவடிக்கைகளில் கோர்ட்டு தலையிடுவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்றும் தீர்ப்பில் தெரிவித்தது.

இந்த நிலையில் ரபேல் விவகார தீர்ப்பு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜனதா அதிருப்தியாளர்களும், முன்னாள் மத்திய மந்திரிகளான யஷ்வந்த்சின்கா, அருண் ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் ஆகியோர் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ரபேல் விவகார வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல்களை அளித்துள்ளது. இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டது. #rafaleissue #supremecourt #YashwantSinha

Tags:    

Similar News