கரூர் கூட்ட நெரிசல் வழக்கு- புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராக சி.பி.ஐ. சம்மன்
- வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
- த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் வருகிற 29-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நிர்வாகிகள் டெல்லி சென்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.