இந்து இளைஞர் கொலைக்கு மதம் காரணம் அல்ல..!- வங்காளதேச இடைக்கால அரசு விளக்கம்
- இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார்.
- இந்தச் சம்பவத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்காளதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப்பட்டதையடுத்து போராட்டம்- வன்முறை வெடித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமான மாணவர்கள் போராட்டத்திற்கு முக்கிய பங்காற்றிய ஷெரீப் உஸ்மான் ஹாடி இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார்.
இதையடுத்து இந்திய தூதரங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் கொடூரமாக அடித்து கொல்லப்பட்டார். மேலும் இந்துக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் வங்காளதேசத்தில் மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டார். ராஜ்பாரி மாவட்டம் பாங்ஷா பகுதியில் 29 வயதான அம்ரித் மொண்டல் என்ற சாம்ராட் என்பவர் சிலரால் அடித்து கொல்லப்பட்டார்.
இதற்கிடையே அம்ரித் மொண்டல் கொலைக்கு மதம் காரணம் அல்ல என்று வங்காளதேச இடைக்கால அரசு தெரிவித்து உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவம் மதம் தொடர்பானது அல்ல என்றும் மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்பு டையது என்றும் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கிடையே போலீசார் கூறும்போது,"அம்ரித் மொண்டல் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அவர் சாம்ராட் பஹினி என்ற குற்ற கும்பலின் தலைவராக செயல்பட்டார்.
அவர் தனது சொந்த கிராமமான ஹொசென் டங்காவில் ஒருவரது வீட்டுக்கு தனது கூட்டாளி களுடன் சென்று பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அப்போது கிராமத்தினர் திரண்டு வந்து அக்கும்பலை தாக்கினர். இதில் அம்ரித் மொண்டல் மட்டும் கிராம மக்களிடம் சிக்கி கொண் டார். அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். போலீசார் அங்கு சென்று அம்ரித் மொண்டலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக டாக்டர் கள் தெரிவித்தனர். அவரது கூட்டாளி ஒருவர் கைது செய்யப்பட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன "என்றனர்.