உலகம்
VIDEO: அமெரிக்காவில் நடுரோட்டில் தரையிறங்கிய சிறிய ரக விமானம் - 3 வாகனங்கள் மீது மோதி விபத்து
- நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுரோட்டில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.