செய்திகள்

ஆளும் கட்சிகள் கூட்டணியால் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது-திருமாவளவன் பேட்டி

Published On 2019-03-24 17:41 IST   |   Update On 2019-03-24 17:41:00 IST
மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்று திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். #thirumavalavan #parliamentelection #tngovt

அரியலூர்:

அரியலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடி மீண்டும் வேண்டாம் என்ற முழக்கத்தோடு இந்த தேர்தலை சந்திக்கின்றோம்.

மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் மிகுந்த எச்சரிக்கையோடு விழிப்புணர்வோடு தேர்தலை நடத்த வேண்டும். மோடி ஆட்சியில் விவசாயிகள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் மோடிக்கு ஆதரவாக எப்படி அலை வீசியதோ? அதே போல் இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக வெளிப்படையாக அலைவீசுகிறது. 40 தொகுதியிலும் நேரமிருந்தால் பிரசாரத்தை மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். #thirumavalavan #parliamentelection #tngovt

Tags:    

Similar News