தமிழ்நாடு செய்திகள்

கூட்டணிக்கு வரவேற்ற எடப்பாடி பழனிசாமி - நன்றி தெரிவித்த டிடிவி தினகரன்

Published On 2026-01-21 13:28 IST   |   Update On 2026-01-21 13:28:00 IST
  • டி.டி.வி. தினகரனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. கூட்டணி முடிவை அறிவித்த பின்னர், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து தினகரன் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்று, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார், இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில், "மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்

மதிப்பிற்குரிய திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!" என்று பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News