தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. அரசு, காவல்துறையை பாராட்டி பேசிய பிரேமலதா - கூட்டணிக்கு அச்சாரமா?

Published On 2026-01-21 13:44 IST   |   Update On 2026-01-21 13:44:00 IST
  • எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.
  • பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.

சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* எல்.ஐ.சி. மேலாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட தி.மு.க. அரசு, காவல்துறைக்கு பாராட்டுகள்.

* காப்பீட்டுத் தொகை முறைகேட்டை கண்டித்த மேலாளர் கல்யாணியை கொன்ற சக ஊழியருக்கு கடும் தண்டனை தர வேண்டும்.

* கூட்டணி தொடர்பாக செய்தியாளர்களிடம் உரிய நேரத்தில் அறிவிப்பேன்.

* தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக யாரும் எங்களை அணுகவில்லை.

* பியூஷ் கோயலை சந்திப்பதாக வெளியான செய்தி தவறானது.

* பியூஷ் கோயலை சந்திக்க எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை.

* கூட்டணி பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. பிரதமர் பங்கேற்கும் கூட்டத்திற்கும் அழைப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News