உள்ளூர் செய்திகள்

கோவையில் இன்று சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் நேரில் ஆய்வு

Published On 2023-09-04 14:52 IST   |   Update On 2023-09-04 14:52:00 IST
  • பீளமேடு தொழில்நுட்ப பூங்கா, அரசு போக்குவரத்து கழக பணிமனையை பார்வையிட்டனர்
  • வாலாங்குளம் படகு இல்லம், உக்கடம் குறிச்சி குளம், புட்டுவிக்கி டிஜிட்டல் துணை மின்நிலையத்தில் விசாரணை

கோவை,

தமிழக சட்டமன்ற பேரவை பொது நிறுவ னங்கள் குழுவின் தலைவர் சவுந்தரபாண்டியன் தலைமை யில் கோவை யில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

முதலாவதாக பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டனர். பின்னர் சுங்கத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையை பார்வையிட்டனர்.

பணிமனையில் நடை பெறும் பணிகளை ஊழி யர்களிடம் கேட்டறிந்தனர். அவர்களின் குறைகளையும் கேட்டனர்.

தொடர்ந்து வாலாங்கு ளம் படகு இல்லம், உக்கடம் குறிச்சி குளம் சீரமைப்பு பணி, புட்டுவிக்கியில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட துணை மின் நிலையம், பச்சாபாளையம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது குழு உறுப்பினர்கள் அப்துல் சமது, உடுமலை ராதாகிருஷ்ணன், மு.பெ.கிரி, கோவிந்தசாமி, பிரகாஷ், மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் உடன் சென்றனர். 

Tags:    

Similar News