தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது
- இன்று பிற்பகலுக்குள் திரிகோணமலை- யாழ்ப்பாணம் இடையே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 490 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு 310 கி.மீ. தொலைவிலும் நிலவுகிறது.
இதனை தொடர்ந்து இன்று பிற்பகலுக்குள் திரிகோணமலை- யாழ்ப்பாணம் (ஜாஃப்னா) இடையே தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரெயில் மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தாழ்வு மண்டலம் காரணமாக 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
தாழ்வு மண்டலத்தால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. மண்டபம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் காற்றின் வேகம் குறைந்த பிறகு மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.