தமிழ்நாடு செய்திகள்
200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - பொங்கல் விழாவில் மு.க.ஸ்டாலின் உறுதி
- தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
- தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது.
கொளத்தூர்:
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
* தமிழர் திருநாளான பொங்கலை எழுச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.
* கொளத்தூர் தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது எனர்ஜி வருகிறது.
* தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
* தேர்தல் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளில் 50 சதவீத பணிகள் மீதம் இருக்கிறது.
* தி.மு.க.வினரை போல் யாரும் வேலை செய்ய முடியாது என பா.ஜ.க.வினரே புகழ்கின்றனர்.
* 200 தொகுதிகளையும் தாண்டி தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
* தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்று பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.