என் மலர்
திருவண்ணாமலை
- மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது
- ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்
திருவண்ணாமலை:
கலெக்டர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன் ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 162 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆயிரத்து 730 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ மாணவிகள் இந்த மாத இறுதியில் மாநில உடற்கல்வி விளையாட்டு பல்கலை க்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.
- அன்னதானம் வழங்கப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் ராமநாதீஸ்வரர் கோவில், கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களில் நேற்று மாலை நந்திபகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பொதுமக்கள் உயிருடன் மீட்டனர்
- முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள் (வயது 73). அதே கிராமத்தில் பாசி படிந்து குளம் ஒன்று உள்ளது. நாகம்மாள் அந்த குளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கால் தவறி குளத்தில் விழுந்தார். இரவு நேரம் என்பதால் அப்பகுதியில் யாரும் வரவில்லை. இதனால் நாகம்மாள் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் குளத்தின் அருகே சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது நாகம்மாள் குளத்தில் இருந்த காய்ந்த மரக்கிளை யை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் குளத்தில் இறங்கி மூதாட்டியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும் நாகம்மாளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு முழுவதும் குளத்தில் இருந்த மரக்கிளையை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிய மூதாட்டியை பொதுமக்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு
- ஆலோசனைகளை வழங்கினார்
வேங்கிக்கால்:
திருவண்ணாமலைக்கு 21-ந் தேதி (சனிக்கிழமை) முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வருகை தருகிறார்.
இதையொட்டி அவர் கலந்து கொள்ளும் விழா மேடை அமைக்கும் பணிகளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி என் அண்ணாதுரை எம்.பி., மு.பெ. கிரி எம். எல். ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், நகர செயலாளர் ப. கார்த்தி வேல்மாறன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.
- அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவின் நிறைவாக 26-ந் தேதி மகாதீப பெருவிழா நடைபெறும். அதையொட்டி, தீபத்திருவிழா பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தீபத்திருவிழா உற்சவத்தின் 7-ம் நாளன்று மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை சீரமைத்து, அதன் உறுதித்தன்மையை சரிபார்க்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை சீரமைக்கப்படுகிறது.
அருணாசலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும், எடையிலும் மிகப்பெரியது. மகாரதத்தின் அச்சு, பீடம், விதானம், ஹைடாலிக் பிரேக் போன்றவற்றில் உள்ள பழுதுகளை முழுமையாக ஆய்வு செய்து சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் முடித்து, பொதுப்பணித்து றையின் (கட்டுமானம்) உறுதிச்சான்று பெறப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்தனர்.
சீரமைப்பு பணிக்காக மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடக்கிறது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீபத் திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
- அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
- மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்தனர்
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்மலா, லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
உரிமைத் தொகை திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்
- கோஷங்களை எழுப்பினர்
செங்கம்:
செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன்பு வக்கீல்கள் திடீரென நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மூலம் வழக்குகள் பதிவு செய்யும் இ-பைலிங் முறையை எதிர்த்து நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பார் அசோசியேஷன் தலைவர் ஏ.பத்மநாபன், துணைத் தலைவர்கள் என்.ஜெயச்சந்திரன், எஸ்.இளங்கோவன், செயலாளர் சி.முருகன், இணை செயலாளர் முபாரக், பொருளாளர் ரஞ்சித்குமார் நூலகர் மைனுதின் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
- பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்
- 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி கூட்ட அரங்கில் உலக பெண்கள் தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை தாமரை செல்வி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நியாட் இன்ஸ்டியூட் ஆப் அட்வான்ஸ் டெக்னிக்கல் டிரைனிங்கின் நிர்வாக தலைவர் வினோத்குமார் கலந்து கொண்டு பெண்களின் தனித்துவத்தை எடுத்துரைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியைகள் மகேஷ்வரி, வசந்தா, தமிழரசி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
- கொசு மருந்து அடிக்கப்பட்டது
- ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன
புதுப்பாளையம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் மருத்துவ வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கொசு பெருக்க த்தால் காய்ச்சல் பரவும் நிலை உள்ளதாக மாலைமலரில் செய்தி வெளியானது.
இந்த செய்தியின் எதிரொலியாக நேற்று முன்தினம் காரப்பட்டு மருந்து வட்டத்திற்குட்பட்ட அடிவாரம் வீராணங்கள் நந்திமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொசு மருந்து அடித்து மருத்துவ முகாம் நடைபெற்றது.
நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராம பகுதிகளில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
புதுப்பாளையம் மருத்துவ வட்ட அலுவலர் அலுவலர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நந்திமங்கலம், அடிவாரம், வீராணந்தல் கிராமப் பகுதி முழுவதும் டெங்கு கொசு பெருக்கத்தை தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நந்திமங்கலம் கிராம பகுதியில் டெங்கு, மலேரியா உள்பட காய்ச்சல்கள் பரவலை தடுக்க காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து க்கொண்ட நந்திமங்கலம் கிராம பகுதி பொதுமக்களுக்கு ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விற்பனைக்காக வந்திருந்தது
- பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வாங்கி சென்றனர்
புதுப்பாளையம்:
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் முழுக்க முழுக்க விவசாய பணிகளில் பொதுமக்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் இருந்து கீரை வகைகள், தக்காளி, பீட்ரூட், முருங்கைக்காய், அவரை, பீர்கங்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை விவசாயி ஒருவர் தனது விளை நிலத்திலிருந்து விற்பனைக்காக நகருக்கு பீன்ஸ் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்திருந்த பீன்ஸ் சுமார் 2 அடிக்கு மேல் நீளம் இருந்தது.
சுமார் மூன்று கிலோ அளவிற்கு விவசாயி கொண்டு வந்திருந்த பீன்ஸ் ஒவ்வொன்றும் 2 அடி நீளம் இருந்தது. இந்த நீள மான பீன்சை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் வியப்புடன் பார்த்து வாங்கி சென்றனர்.
- மண்டல இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்துகொண்டர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் 2023-24-ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. மேலாண்மை நிலையத்தின முதல்வர் ரவிக்குமார் வரவேற்றார்.
சரக துணைப்பதிவாளர் மு.வசந்தலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர் சித்ரா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கோ.நடராஜன் பட்டயப் பயிற்சி வகுப்பினை தொடங்கிவைத்து பேசினார்.
பட்டயப் பயிற்சியின் முக்கியத்துவம், கூட்டுறவு சங்கங்களில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து விளக்கமளித்தார். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சியாளர்கள் இணைவழியில் நேரடியாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதில் கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவியாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
- வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
- போலீசில் புகார் அளித்தார்
ஆரணி:
கண்ணமங்கலம் அடுத்த கீழ்வல்லத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி சரசு (வயது 54). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகனுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
இதனால் பத்திரிக்கை கொடுப்பதற்காக சரசு உறவினர்கள் ஞானம்மாள், இந்துமதி ஆகியோருடன் கடந்த 8-ந் தேதி ஆட்டோவில் ஆரணி அடுத்த லாடாவரத்திற்கு சென்றனர். அப்போது சங்கீத வாடி என்ற இடத்தில் வரும்போது எதிரே பைக்கில் வந்த மாதவன், அபாஸ் என்ற வாலிபர்கள் ஆட்டோவை மடக்கினர்.
அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆட்டோவை ஏன் மடக்கிறீர்கள் என்று சரசு மற்றும் உடன் இருந்த பெண்கள் வாலிபர்களிடம் கூறி உள்ளனர். இதனால் இரு தரப்பை சேர்ந்த வர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த மாதவன் மற்றும் அபாஸ் 3 பெண்க ளையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகராறை விளக்கி விட்டு காயம் அடைந்த பெண்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சரசு ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாதவனை நேற்று இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் ஜெயிலில் அடைத்தனர். மேலும் தலை மறைவான அபாசை தேடி வருகின்றனர்.






