உள்ளூர் செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்- ஆர்.எஸ்.பாரதி

Published On 2023-06-16 13:47 IST   |   Update On 2023-06-16 13:47:00 IST
  • செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் பழைய வழக்குகளை திமுக வாபஸ் பெறவில்லை.
  • பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல...

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வீடியோ வெளியிட்டு பதில் அளித்துள்ளார். வீடியோவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

* செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை மனிதநேயத்துடன் நடந்து கொள்ளவில்லை. செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டார்.

* மாரடைப்பு எப்போது எப்படி வேண்டும் என்றாலும் ஏற்படலாம். இதுகூட தெரியாமல் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி எப்படி இருந்தார் என தெரியவில்லை.

* உடல் நலம் பாதித்தவரை மருத்துவமனைக்கு சென்று பார்த்ததில் என்ன தவறு?. திகார் சிறைக்கு சென்று கனிமொழியை ஸ்டாலின், டிஆர் பாலு உள்ளிட்டோர் பார்த்தனர்.

* இஎஸ்ஐ மருத்துவமனை அறிக்கையை கொச்சைபடுத்தியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

* செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்தாலும் பழைய வழக்குகளை திமுக வாபஸ் பெறவில்லை.

* செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடு புகாரில் தான்.

* பதவிக்காக ஒரு பேச்சும், பதவிக்கு வந்த பின் வேறு பேச்சு பேசுவது நாங்கள் அல்ல...

* பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு தொடரப்படும்.

* அதிமுகவினர் மீது போடப்பட்ட வழக்குகளை நிரூபித்து காட்டியுள்ளது திமுக.

* பிடிஆர் ஆடியோ தொடர்பாக தவறான தகவலை ஈபிஎஸ் பரப்புகிறார்.

* 15 மாதத்தில் மருத்துவமனை திறந்த எங்கள் முதல்வரை போல ஈபிஎஸ் செய்த சாதனை ஒன்றுமில்லை.

* செந்தில் பாலாஜி மீதான குற்றம் நிரூப்பிக்கப்பட்டால்தான் அவர் குற்றவாளி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News