உள்ளூர் செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துடன், நாளை பா.ஜனதா குழுவினர் பேச்சுவார்த்தை

Published On 2024-03-02 15:00 IST   |   Update On 2024-03-02 15:00:00 IST
  • பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறார்கள்.
  • சென்னை வரும் பிரதமர் மோடியையும் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், வருகிற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் பா.ஜனதா கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து கூட்டணி பற்றி பேசுகிறார்கள். நாளை மறுநாள் (4-ந்தேதி) சென்னை வரும் பிரதமர் மோடியையும் சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார்.

Tags:    

Similar News