தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி தி.மு.க. - வைத்திலிங்கம் பேட்டி

Published On 2026-01-21 11:05 IST   |   Update On 2026-01-21 11:05:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.
  • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி தி.மு.க. தான் என்பதால் இணைந்துள்ளேன்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை வைத்திலிங்கம் கொடுத்தார்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பிறகு வைத்திலிங்கம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் வரவேற்று அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு அவர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார்.

அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவருக்கு பூச்செண்டு கொடுத்து அவரது தலைமையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.

இந்நிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்ட பின்னர் வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அண்ணா ஆரம்பித்த தாய் கழகமான தி.மு.க.வில் என்னை இணைத்துக்கொண்டுள்ளேன்.

* தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி தி.மு.க. தான் என்பதால் இணைந்துள்ளேன்.

* அ.தி.மு.க. சுதந்திரமாக செயல்படவில்லை. சர்வாதிகாரமாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News