கர்நாடகா தேர்தல்

GOLD PRICE TODAY: அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Published On 2026-01-21 09:38 IST   |   Update On 2026-01-21 09:39:00 IST
  • தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது.
  • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம், வெள்ளி விலை கடந்த ஓராண்டுக்கு மேலாக புதிய பாதையில் பயணிக்கிறது. ஏற்றம்-இறக்கம் என்ற நிலை நீடித்தாலும், பெருமளவில் ஏறுமுகத்திலேயே இரண்டும் இருந்து புதிய உச்சத்தை தாண்டுகிறது.

தங்கம் ஒரு பவுன் ரூ.1 லட்சத்தை தாண்டுமா? என பேசி வந்த நிலையில், அதனையும் கடந்து இப்போது ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோ ரூ.1 லட்சத்தை கடக்குமா? என பலர் கேட்டு வந்த சூழலில், ரூ.1 லட்சம் மட்டுமல்ல, ரூ.2 லட்சம் ஏன் ரூ.3 லட்சத்தையும் தாண்டி, அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

இவ்வளவு நிலைகளை கடந்தும், மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்து கொண்டே வருவதைதான் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில் நேற்றும் விலை உயர்ந்து இருந்தது.

தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.160-ம், பவுனுக்கு ரூ.1,280-ம் உயர்ந்திருந்தது. பிற்பகலில் மேலும் கிராமுக்கு ரூ.290-ம், பவுனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்தது.

ஆக நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.450-ம், பவுனுக்கு ரூ.3,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்கப்பட்டது.

இதன் மூலம் தங்கம் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை எட்டியிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.730-ம், பவுனுக்கு ரூ.5,840-ம் அதிகரித்துள்ளது.

தங்கம் விலை ராக்கெட் வேகம் என்றால், வெள்ளி விலை 'ஜெட்' வேகத்தில் இருக்கிறது. தினமும் தாறுமாறாக அதிகரிக்கிறது. நேற்று காலையில் கிராமுக்கு ரூ.12-ம், கிலோவுக்கு ரூ.12 ஆயிரமும், பிற்பகலில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.22-ம், கிலோவுக்கு ரூ.22 ஆயிரமும் எகிறி, ஒரு கிராம் ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

வெள்ளி விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கிலோ ரூ.3½ லட்சத்தை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டு வந்த நிலையில், அது இந்த மாதம் இறுதிக்குள்ளாகவே அந்த நிலையை எட்டிவிடும் என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.14,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.340-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

20-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

19-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,600

18-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

17-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240

16-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,840

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

20-1-2026- ஒரு கிராம் ரூ.340

19-1-2026- ஒரு கிராம் ரூ.318

18-1-2026- ஒரு கிராம் ரூ.310

17-1-2026- ஒரு கிராம் ரூ.310

16-1-2026- ஒரு கிராம் ரூ.306

Tags:    

Similar News