உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிளை விட்டு சென்ற நபர் அடையாளம் தெரிந்தது

Published On 2023-06-12 06:19 GMT   |   Update On 2023-06-12 06:19 GMT
  • வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.
  • 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வரட்டு பள்ளம் அணை. இந்த அணை பகுதியில் கடந்த 2 நாட்களாக இருசக்கர வாகனம் கேட்பாரற்று அங்கேயே இருந்தது.

இதனை அந்தியூர் பகுதியில் உள்ள சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதனை அடுத்து பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் அந்த வாகனத்தின் எண்ணை வைத்து எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை செய்தனர்.

அதில் கொங்காடை காலனி பகுதியைச் சேர்ந்த செல்வன் (26) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து செல்வத்திடம் எதற்காக இந்த வண்டியை 2 நாட்களாக அந்த இடத்தில் நிறுத்தி வந்தாய் என்று விசாரணை செய்தனர்.

அதற்கு மலை பாதையில் வரும் பொழுது வாகனம் பழுதாகி விட்டது. அதனை எடுத்து சென்று சரி செய்ய வேண்டும். அதனால் அங்கேயே நிறுத்தி வந்து விட்டேன் என்று பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து பர்கூர் போலீசார் அந்த வாகனத்தை மினி ஆட்டோவின் மூலம் ஏற்றி வரட்டு பள்ளம் செக் போஸ்ட் பகுதியில் கொண்டு சென்று இறக்கி வைத்து உள்ளார்கள். மேலும் வண்டியின் உரிமையாளரான செல்வத்திடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தார்கள்.

இதனால் வரட்டு பள்ளம் அணை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் யாருடையது என்ற பரபரப்பு முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News