செய்திகள்

மத்தியில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது- ஜிகே வாசன் பேட்டி

Published On 2018-11-04 10:27 GMT   |   Update On 2018-11-04 10:27 GMT
மத்தியில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #bjp

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆத்தூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை சரி செய்து அதிக அளவு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

சேலம்- உளுந்தூர் பேட்டை நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. இதனால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சர்வீஸ் சாலைகள் துண்டு, துண்டாக உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைத்தால் ஆட்சியாளர்கள் கூறுவதுபோல 3½ மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லலாம்.

தலைவாய்பட்டி கிராமத்தில் சாமுவேல் என்பவரது மகள் ராஜலட்சுமி கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கி உதவிட வேண்டும். மேலும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும்.

பசுமை வழி திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்காக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். 20 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் தேர்தல் நடத்திட தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மத்தியில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #bjp

Tags:    

Similar News