நாயகன் சரவணா விக்ரம் பெண்களுடன் பேச தயங்கும் நபர். இவருடைய தயக்கத்தை போக்க, நண்பர் ஒருவர், பாலியல் தொழிலாளி ஹஸ்லி அமானிடம் அழைத்து செல்கிறார். அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு செல்லாமல், ஒருநாள் முழுவதும் டேட்டிங்கும் அழைத்து செல்கிறார் சரவணா விக்ரம்.
இந்நிலையில் ஹஸ்லி அமானை தாதாவான ராஜேஷ் பாலசந்திரன் ஒருபுறம் தேடி அலைகிறார். இன்னொரு புறம் போலீஸ் அதிகாரி தன் துப்பாக்கியை ஹஸ்லி திருடி சென்றுவிட்டதாக தேடி வருகிறார்.
இறுதியில் இருவரிடம் இருந்து ஹஸ்லி அமான் தப்பித்தாரா? போலீஸ் அதிகாரி துப்பாக்கி ஹஸ்லி கைக்கு வந்தது எப்படி? டேட்டிங் சென்ற சரவணா விக்ரம் நிலை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சரவணா விக்ரம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் படமே பாலியல் தொழிலாளியுடன் டேட்டிங் செல்லும் மாறுபட்ட கதாபாத்திரத்தை உணர்த்து நடித்து இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஹஸ்லி அமான், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கவர்ச்சி இல்லாமல் பாலியல் தொழிலாளியாகவும் சரவணா விக்ரமுடன் காதல் மற்றும் வில்லன்களிடம் தப்பிக்கும் காட்சிகளில் அவரது உடல்மொழியும், வசனங்களும் நேர்த்தியாக அமைந்து உள்ளது.
வில்லனாக நடித்திருக்கும் ராஜேஷ் பாலசந்திரன் ஓவர் ஆக்டிங் போல் இருக்கிறது. பசுபதி ராஜ், சாய் தினேஷ், யுவராஜ் சுப்ரமணியன், ஹரிணி திருவேங்கடம், விஷ்ணு சந்திரசேகர் ஆகியோர் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்கம்
காதல், காமம் இரண்டை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே.மணி. திரைக்கதையை வித்தியாசமாக கொடுக்க நினைத்து இருக்கிறார். ஆனால், பெரியதாக ஒர்க்கவுட் ஆகவில்லை. இவரது கதை சொல்லலுக்கு பாராட்டுகள். கதைக்கு சம்பந்தமில்லாத சில காட்சிகளும், வசனங்களும் பலகீனம்.
இசை
ஜோன்ஸ் ரூபர்டின் இசையும் லோகேஷ் இளங்கோவன்.
ஒளிப்பதிவு
ஒளிப்பதிவும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
ரேட்டிங்- 2.5/5