சினிமா செய்திகள்

75 மில்லியன் பார்வைகளை கடந்த ஜனநாயகன் டிரெய்லர்

Published On 2026-01-04 15:19 IST   |   Update On 2026-01-04 15:19:00 IST
  • ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
  • அனிருத் இசையில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் செம்ம ஹிட்

'ஜனநாயகன்' நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தில் 69-வது படம் மற்றும் அவர் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன்னதாக நடிக்கும் இறுதித் திரைப்படம் என்பதால் இது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் இதுவரை வெளியான அனைத்து பாடல்களும் செம்ம ஹிட். குறிப்பாக தளபதி கச்சேரி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் டிரெயிலர் வெளியானது. டிரெய்லரில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை வெளியான ஜனநாயகன் டிரெய்லர் தற்போது வரை யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 75 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News