ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் "ஃபாதர்" !
- அப்பாவின் பெருமையை அழுத்தமாக பேசும் அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
- “கப்சா” படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் உருவாகி உள்ளது.
'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' பட இராஜா மோகன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ், டார்லிங் கிருஷ்ணா முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் "ஃபாதர்". தாய் பாசத்தை பல படங்கள் பேசும்நிலையில், ஒரு அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான அழகான உறவை பேசும் படமாக ஃபாதர் அமைந்துள்ளது. ஐந்து மொழிகளில் படம் உருவாகி உள்ளது.
மைசூர், பெங்களூர், குடகு உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. "கப்சா" படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, RC Studios சார்பில் தயாரிப்பாளர் R.சந்துரு இந்தப் படத்தை மிகப் பெரிய அளவில் தயாரித்துள்ளார்.
தந்தை, மகன் இடையிலான உறவைப் பேசும் படம்
இசையமைப்பாளர் நகுல் அப்யங்கர் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் வெளியான தீம் மியூசிக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் முழு இசை வெளியீடு நடைபெறவுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை ஆனந்த் ஆடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து டிரெய்லர், ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.