சினிமா செய்திகள்

என் அழகிற்கு காரணம் இவர்கள் தான் - அஞ்சு குரியன்

Published On 2026-02-26 08:48 IST   |   Update On 2026-02-26 08:48:00 IST
  • அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.
  • பட விழாக்களில் கவர்ச்சி உடைகளில் தரிசனம் தந்தும் பார்ப்போர் கண்களை கவர்ந்தும் வருகிறார்.

'நேரம்', 'சென்னை டூ சிங்கப்பூர்', 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'ஓஹோ எந்தன் பேபி', 'அதர்ஸ்' போன்ற படங்களில் நடித்த அஞ்சு குரியன், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

சமீபகாலமாக பட விழாக்களில் கவர்ச்சி உடைகளில் தரிசனம் தந்தும் பார்ப்போர் கண்களை கவர்ந்தும் வருகிறார். இதுதவிர சமூக வலைதளங்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார்.

அவர் கூறுகையில், "அழகை ரசிப்பதில் என்றுமே தவறு கிடையாது. எல்லை மீறாத வரை இங்கு எதுவுமே ஏற்புடையது தான். எனக்காக ரசிகர்கள் தரும் அன்பும், ஆதரவும் என்னை எப்போதுமே ஆனந்தமாய் வைத்திருக்கிறது. ரசிகர்களின் அன்புதான் என் அழகுக்கு காரணம் என்று சொல்வேன்", என்கிறார்.

Tags:    

Similar News