சினிமா செய்திகள்

ஜமா புகழ் பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள புதிய படத்தின் அப்பேட்

Published On 2026-02-26 10:03 IST   |   Update On 2026-02-26 10:03:00 IST
  • நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார்.
  • மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

ஜமா புகழ் பாரி இளவழகன் - NEEK படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இணைந்து நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய வேடத்தில் நடிகை ரோஜா நடித்துள்ளார். இந்த படத்தை வரும் கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 'குட் நைட்', 'டூரிஸ்ட் ஃபேமிலி' ஆகிய வெற்றி படங்களை தயாரித்திருந்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், பாரி இளவழகன் இயக்கி நடிக்கும் புதிய படத்திற்கு 'அன்பே டயானா' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விரைவில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

Similar News