சினிமா செய்திகள்

வெளியானது 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரெய்லர்

Published On 2026-02-26 09:20 IST   |   Update On 2026-02-26 09:20:00 IST
  • இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
  • ‘ஓ பட்டர்பிளை’ படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஓ பட்டர்பிளை'. விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கி உள்ள இப்படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கணவன், மனைவிக்குள்ளான காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

மேலும், 'ஓ பட்டர்பிளை' படம் வருகிற 6-ந்தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 2.28 நிமிடங்கள் கொண்ட டிரெய்லரில் தம்பதிக்குள் ஏற்படும் பிரச்சனை, இதனிடையே, அவர்களுக்கிடையே வரும் கதாநாயகியின் முன்னாள் காதலனால் ஏற்படும் பிரச்சனை அதனால் நடைபெறும் கொலை என முடிவடைகிறது. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.


Full View

Tags:    

Similar News