செய்திகள்

கருணாநிதி இறுதிச்சடங்கை நிறுத்த முடியாது - டிராபிக் ராமசாமி மனு மீது சுப்ரீம் கோர்ட் கருத்து

Published On 2018-08-08 09:17 GMT   |   Update On 2018-08-08 09:17 GMT
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதற்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. #Karunanidhideath #DMK
புதுடெல்லி:

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணமடைந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே திமுக சார்பில் இடம் கோரப்பட்டது. ஆனால், அரசு அதனை மறுத்து கிண்டியில் உள்ள காமராஜர் மண்டபத்தில் இடம் ஒதுக்குவதாக அறிவித்தது.

அரசின் அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திமுக முறையிட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

ஆனால், சென்னை ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்ய மறுத்த சுப்ரீம் கோர்ட், கருணாநிதியின் இறுதி சடங்குக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். மனுவாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் அவரை அறிவுறுத்தினர். #Karunanidhideath #DMK #SupremeCourt
Tags:    

Similar News