கிரிக்கெட் (Cricket)

கேஎல் ராகுல் இல்லை.. பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட் கீப்பர் யார்? ஐசிசி கூறும் விதி என்ன?

Published On 2023-09-01 17:42 IST   |   Update On 2023-09-01 17:42:00 IST
  • முதல் 2 போட்டிகளில் கேஎல் ராகுல் விளையாடமாட்டார்.
  • இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் கூட கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது லீக் போட்டி நாளை பல்லேகலே மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் இலங்கையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் முதல் 2 போட்டிகளில் (பாகிஸ்தான் மற்றும் நேபாளம்) கேஎல் ராகுல் விளையாடமாட்டார் என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அறிவித்திருந்தார்.

அவருக்குப் பதிலாக இந்திய அணியில் இஷான் கிஷான் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்புகள் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சஞ்சு சாம்சன் பேக்கப் வீரராக அணியில் இடம் பெற்றிருக்கிறார். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால், யாராவது ஒருவரை அணியிலிருந்து நீக்க வேண்டும். அல்லது யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதோடு, அதற்கான சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தற்போது கேஎல் ராகுலை அணியிலிருந்து நீக்கினால் மட்டுமே சஞ்சு சாம்சனை அணியில் விளையாட வைக்க முடியும். ஆனால், கேஎல் ராகுல் தான் அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்பதால், அவரை அணி நிர்வாகம் நீக்காது. இரண்டு போட்டிகள் வரையில் இஷான் கிஷான் தான் அணியில் இடம் பெற வாய்ப்புகள் இருக்கிறது. இரண்டு போட்டிகளுக்குப் பிறகும் கூட கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்றால், சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, இஷான் கிஷான் அணியில் இடம் பெற்றால், அவர் 3 ஆவது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. சுப்மன் கில் 3-வது இடத்தில் களமிறங்கி சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆதலால், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். இஷான் கிஷான் 3-வது இடத்திலும், விராட் கோலி 4-வது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் 5-வது இடத்திலும் களமிறங்குவார்கள்.

இவர்களைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News