கிரிக்கெட் (Cricket)

டி காக் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸ் உடனான டி20 தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

Published On 2026-01-30 01:37 IST   |   Update On 2026-01-30 01:37:00 IST
  • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.
  • தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

செஞ்சூரியன்:

வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று 1-0 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி செஞ்சூரியனின் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. ஹெட்மயர் 42 பந்தில் 75 ரன்னும், ரூதர்போர்டு 24 பந்தில் 57 ரன்னும், பிராண்டன் கிங் 30 பந்தில் 49 ரன்னும் குவித்தனர்.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் கேசவ் மகராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். குறிப்பாக, டி காக் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

டிகாக் 49 பந்தில் 10 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 115 ரன்னும், ரியான் ரிக்கல்டன் 36 பந்தில் 77 ரன்னும் குவித்தனர்.

இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 2-0 என தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருது டி காக்குக்கு அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News