கிரிக்கெட் (Cricket)

WPL 2026: 8 விக்கெட் வித்தியாசத்தில் உ.பி.யை எளிதில் வீழ்த்தியது பெங்களூரு

Published On 2026-01-29 22:46 IST   |   Update On 2026-01-29 22:46:00 IST
  • முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய பெங்களூரு அணி 13.2 ஓவரில் 147 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது.

வதோதரா:

மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா அரை சதம் கடந்து 55 ரன்னும், மெக் லேனிங் 41 ரன்னும் எடுத்தனர்.

ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 6வது வெற்றியைப் பதிவுசெய்தது.

அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 37 பந்தில் 75 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 27 பந்தில் 54 ரன்னும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

Tags:    

Similar News