கிரிக்கெட் (Cricket)
27.4 கோடி ஃபாலோவர்ஸ்... முடங்கிய விராட் கோலியின் Instagram பக்கம் மீட்பு
- 27.4 கோடி ஃபாலோவர்களைக் கொண்ட கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது.
- இது தொடர்பாக அவரது மனைவி அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ரசிகர்கள் காரணத்தை கேட்டு வந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திடீரென வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
27.4 கோடி ஃபாலோவர்களைக் கொண்ட அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் Deactivate செய்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இது தொடர்பாக அவரது மனைவி அனுஷ்காவின் இன்ஸ்டாகிராம் கணக்கை டேக் செய்து ரசிகர்கள் காரணத்தை கேட்டு வந்தனர்.
இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.