கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்: ரோகித் சர்மா சாதனையை முறியடித்த அயர்லாந்து கேப்டன்

Published On 2026-01-30 05:18 IST   |   Update On 2026-01-30 05:18:00 IST
  • டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 178 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

துபாய்:

அயர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

துபாயில் முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய யு.ஏ.இ. அணி 19.5 ஓவரில் 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆடியதன் மூலம் அயர்லாந்து கேப்டன் பால் ஸ்டிர்லிங் புதிய சாதனை படைத்தார். இது அவருக்கு 160-வது ஆட்டமாகும்.

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் பங்கேற்றவர் என்ற சாதனையை இந்திய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவிடம் (159 ஆட்டம்) இருந்து தட்டிப்பறித்தார்.

Tags:    

Similar News