கிரிக்கெட் (Cricket)
இன்னும் ஓரிரு நாட்களில் பந்து வீச தொடங்கும் வாஷிங்டன் சுந்தர்: விரைவில் அணியில் இணைகிறார்
- வாஷிங்டன் சுந்தர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
- நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது காயம் ஏற்பட்டது.
தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் எஞ்சிய ஆட்டம் மற்றும் 20 ஓவர் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார்.
26 வயதான வாஷிங்டன் சுந்தர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். உலகக் கோப்பை வருகிற அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. அதற்குள் அவர் உடல்தகுதி பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை உடற்குதியை பெறவில்லை என்றால் மாற்று வீரர் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்.
இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இன்னும் ஓரிரு நாட்களில் பந்து வீசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிறப்பாக பந்து வீசி உடற்குதியை நிரூபித்து விட்டால் உடனடியாக அணியில் இணைவார்.