கிரிக்கெட்

எம்.எஸ்.டோனி அடுத்த ஐபிஎல் சீசனிலும் விளையாட வேண்டும் - சுரேஷ் ரெய்னா

Published On 2024-05-19 10:34 GMT   |   Update On 2024-05-19 10:34 GMT
  • நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.
  • இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

ஐபிஎல் 2024 தொடரின் 68 வது ஆட்டத்தில் நேற்று ( 18) மாலை பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை செய்தன.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததால் முதலில் பேட்டங் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 218 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் இறங்கி 218 ஸ்கோரை துரத்திய சென்னை அணியில் ரச்சின்- ரகானே ஜோடியும் இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய டோனி ஜடேஜா ஜோடியும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி ஓவரில் முதல் பந்திலேயே 110 மீ தூரம் பந்தை பறக்கவிட்டு சிக்ஸர் ஒன்றை விளாசினார் டோனி.

இருப்பினும் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெறவே, பிளே ஆப் சுற்றில் இருந்து சிஎஸ்கே வெளியேறியது.

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்ற பிறகு எம்.எஸ்.டோனி ஓய்வு பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் சென்னை அணி வெளியேறியுள்ளது.

இந்நிலையில், ருதுராஜ் கெயிக்வாட்டை கேப்டனாக வளர்த்தெடுக்க அடுத்த ஐபிஎல் சீசனிலும் எம்.எஸ்.டோனி விளையாட வேண்டும் என்று முன்னாள் சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News