கிரிக்கெட்

டோனிதான் கஷ்டம்: டிகே அப்படி இல்லை- ரோகித் சர்மாவின் சுவாரஸ்ய தகவல்

Published On 2024-04-18 07:24 GMT   |   Update On 2024-04-18 07:24 GMT
  • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து டிகே என ரோகித் கிண்டாலாக கூறினார்.
  • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் 35 பந்தில் 83 ரன்கள் எடுத்து அசத்தினார்.

புதுடெல்லி:

ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே மாதம் 26-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை மே 1-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தொடர்பாக தேர்வு குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மும்பை- பெங்களூரு அணிகள் மோதிய ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கை பார்த்து ரோகித், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து டிகே என கிண்டாலாக கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த போட்டி மட்டுமல்லாமல் அதற்கு அடுத்த போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டி முடிந்து விட்டது என நினைத்த நிலையில் தனி ஒருவனாக நின்று ஆட்டத்தை மாற்றினார். இருந்தாலும் அந்த போட்டியில் ஆர்சிபி தோல்வியை தழுவியது. ஆனாலும் அவரது ஆட்டம் அனைவரின் மனதில் இடம் பிடித்தது.

ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தினேஷ் கார்த்திக்கை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் குறித்து ரோகித் சர்மா கூறியதாவது:- உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாட வேண்டும் என எம்எஸ் டோனியை சமாதானப்படுத்துவது கடினமாக இருக்கும். தினேஷ் கார்த்திக்கை சமாதானப்படுத்துவது எளிதாக இருக்கும் என ரோகித் கூறினார்.

Tags:    

Similar News