கிரிக்கெட் (Cricket)

டெஸ்டில் இருந்து கோலி சீக்கிரம் ஓய்வு பெற்று விட்டார்- ஆலன் டொனால்டு

Published On 2026-01-12 15:01 IST   |   Update On 2026-01-12 15:01:00 IST
  • விராட் கோலி போன்று கிரிக்கெட் மீதான தீராத வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை.
  • அவரை போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர் யாரும் இல்லை.

கேப்டவுன்:

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு அளித்த ஒரு பேட்டியில், 'விராட் கோலி போன்று கிரிக்கெட் மீதான தீராத வேட்கை கொண்ட ஒரு வீரரை நான் பார்த்ததில்லை. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

வீரர்களின் ஓய்வறையில் அவரிடம் ஒரு சாம்பியன் பயிற்சியாளராக இருப்பது பற்றி அடிக்கடி (ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த சமயத்தில்) உரையாடி இருக்கிறேன்.

அவரை போன்று மிகவும் கடினமாக பயிற்சி மேற்கொள்ளும் வீரர் யாரும் இல்லை. அவர் ஒரு எந்திரம் போன்றவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஆட்டத்தை நான் தவற விடுகிறேன்.

டெஸ்டில் இருந்து அவர் சீக்கிரமாக ஓய்வு பெற்று விட்டதாக நினைக்கிறேன். அதே சமயம் அடுத்த ஆண்டு நடக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி களத்தில் நாம் அவரை பார்க்கலாம் என்பதில் சந்தேகமில்லை' என்றார்.

Tags:    

Similar News