கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா, விராட் கோலியை வித்தியாசமாக பாராட்டிய பரோடா கிரிக்கெட் சங்கம்

Published On 2026-01-12 04:58 IST   |   Update On 2026-01-12 04:58:00 IST
  • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 300 ரன்கள் எடுத்தது.
  • அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அகமதாபாத்:

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தப் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் வித்தியாசமான முறையில் பாராட்டு விழா நடந்தது.

மைதானத்தின் ஓரம் பீரோ போன்று வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து இருவரும் வெளியே வந்ததும் பூச்செண்டு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் அதில் இருந்த தங்களது ஆளுயர புகைப்படத்தில் கையெழுத்திட்டனர். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Tags:    

Similar News