சினிமா

சர்வதேச திரைப்பட விழாவில் மெர்சல் - ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு

Published On 2018-07-31 03:09 GMT   |   Update On 2018-07-31 03:09 GMT
விஜய் நடிப்பில் கடும் சர்சைகளுக்கு மத்தியில் வெளியான `மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. #Mersal #Vijay
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

தற்போது உலக திரைப்பட விழாக்களில் `மெர்சல்' படம் திரையிடப்பட்டு வருகிறது. தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக `மெர்சல்' படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



முன்னதாக, வருகிற செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #Vijay

Tags:    

Similar News