இளமையான தோற்றத்துக்கு என்ன காரணம்?- சரத்குமார்
- அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
- பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே ‘டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சரத்குமார், 71 வயதிலும் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் வகையில் நடித்துக் கொண்டிருக்கிறார். '3 பி.எச்.கே.', 'டியூட்', 'கொம்புசீவி' என வரிசையாக அவரது நடிப்பில் வெளியான படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
நடிப்பு தாண்டி கட்டுடலுக்கும் சொந்தக்காரரான சரத்குமார், உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களை (டயட்) கடைபிடித்து உடலை பேணிக்காத்து வருகிறார். பிளாக் காபியில் நெய் கலந்து சாப்பிடும் யுக்தி, அவர் மூலமாகவே 'டிரெண்ட்' ஆகி போயிருக்கிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சரத்குமாரிடம் '71 வயதிலும் இப்படி உடற்கட்டுடன் இருக்க என்ன காரணம்?' என கேட்கப்பட்டது. அதற்கு, "71 வயதில் நான் இப்படி இருக்கிறேன் என்றால் நான் புகைப்பிடிப்பதில்லை, குடிப்பழக்கமும் கிடையாது. என்னிடம் நல்ல பழக்க வழக்கங்களே உள்ளன. அதுதான் இதற்கெல்லாம் காரணம் என்று நினைக்கிறேன்" என சரத்குமார் கூறியுள்ளார்.