சம்பவம் செய்த ஜேசன் சஞ்சய்... 50 லட்சம் பார்வைகளை கடந்த சிக்மா டீசர்

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் நேற்று உலகெங்கிலும் வெளியாகியது.
சம்பவம் செய்த ஜேசன் சஞ்சய்... 50 லட்சம் பார்வைகளை கடந்த சிக்மா டீசர்
Published on

நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகான நடிக்கிறார். அவருடன் பரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், அன்புதாசன், யோக் ஜேபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன், ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமான ஜேஎஸ்கே மீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஃபர்ஸ்ட் லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. இந்த நிலையில் யூடியூப்பில் படத்தின் டீசரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

தொடர்ந்து ரிலீஸ் தேதி தொடர்பான அறிவிப்புகள், பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com