சினிமா செய்திகள்
'டிரெயின்' முதல் சிங்கிள் வெளியானது!
- கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
- இம்மாத இறுதியில் படம் வெளியாக வாய்ப்புள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'தலைவன் தலைவி'. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் டிரெயின். யாரும் எதிர்பார்க்காத மிஸ்கின்-விஜய் சேதுபதி கூட்டணி என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஸ்ருதிஹாசன், நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை ஃபௌசியா பாத்திமா மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீவத் மேற்கொள்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான கன்னக்குழிக்காரா தற்போது வெளியாகி உள்ளது.
இப்பாடலை நடிகை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். கபிலனின் பாடல் வரிகளுக்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார்.