null
பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை மறைவு
பிரபல இந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் தந்தை சுனில் மல்ஹோத்ரா (50) நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14 (சனிக்கிழமை) டெல்லியில் அவர் உயிர் பிரிந்ததாக சித்தார்த் மல்ஹோத்ரா நேற்று இரவு தனது இன்ஸ்டா பதிவில் அறிவித்தார்.
அவரது மறைவைத் தொடர்ந்து, சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் அவரது மனைவி நடிகை கியாரா அத்வானி டெல்லிக்குச் சென்று இறுதிச் சடங்குகளை முடித்துள்ளனர்.
தனது தந்தையின் மறைவு குறித்த பதவில் சித்தார்த், "அவர் நேர்மை கொண்ட அரிய மனிதர். எதற்கும் வளைந்து கொடுக்காத விழுமியங்களுடன் வாழ்ந்தவர்.
முரட்டுத்தனம் இல்லாத ஒழுக்கம், அகந்தை இல்லாத பலம் ஆகியவை அவரிடம் இருந்தன. வாழ்க்கை அவரைச் சோதித்தபோது கூட அவர் நேர்மறையாகவே இருந்தார். அப்பா, உங்களின் நேர்மையே எனக்குக் கிடைத்த சொத்து" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சுனில் மல்ஹோத்ரா வணிகக் கடற்படை கேப்டனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா தனது குடும்பத்தினருடன் டெல்லியில் தங்கியுள்ளார். திரையுலகைச் சேர்ந்த பலரும் அவருக்குத் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.