சினிமா செய்திகள்

"அடியேய் OG is Back டி!" வைரலாகும் சேயோன் படத்தின் புது ப்ரோமோ வீடியோ

Published On 2026-02-17 15:26 IST   |   Update On 2026-02-17 15:26:00 IST
  • சேயோன் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
  • சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

கமல் ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரிக்கும் "சேயோன்" படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அமரன் திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் கமல் ஹாசன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. "சேயோன்" திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், சேயோன் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சேயோன் திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி வெளியாகி இருக்கும் புதிய வீடியோ படம் கிராம பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்டிருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இருக்கிறது. ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Full View
Tags:    

Similar News