சிவகார்த்தியேன் தயாரிப்பில் உருவாகும் 9வது படம்.. பர்ஸ்ட் லுக், டீசர் வெளியீடு
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தற்போதுவரை 8 படங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இத்தயாரிப்பு நிறுவனத்தின் புதுப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த புதிய படத்தை ஃபேஸன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
இதன் அறிவிப்பு நேற்று வீடியோவாக வெளியானது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் 9வது படத்தின் பர்ஸ்ட் லுக், டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
மேலும், இப்படத்திற்கு தாய் கிழவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டீசர் முழுவதும் நடிகை ராதிகா வயதான கெட்டப்பில் வந்து அடாவது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.