சினிமா செய்திகள்

அல்லு அர்ஜூனை சந்திக்க 42 கட்டுப்பாடுகளா?

Published On 2026-02-10 18:45 IST   |   Update On 2026-02-10 18:45:00 IST
  • அல்லு அர்ஜூனுக்கு எதிரான குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது.
  • அல்லு அர்ஜூன் எப்போதும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார்.

தெலுங்கு நட்சத்திர நடிகரான அல்லு அல்ஜூனை சந்திப்பதற்கு 42 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர் ஒருவர் செய்தி வெளியிட்டிருந்தார். இது தெலுங்கு சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அல்லு அர்ஜூன் அலுவலகம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் "அல்லு அர்ஜூனுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது. உண்மைக்கு புறம்பானது. அல்லு அர்ஜூன் எப்போதும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் நடந்து கொண்டார். அவரது அணி இந்த பொய் குற்றச்சாட்டை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை வெளியிட்டவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வதற்கான வேலையை தொடங்கியுள்ளது. மேலும், சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூன் கண்ணை நேருக்குநேர் பார்க்கக் கூடாது, கைக்குலுக்கக் கூடாது, மீடியாவை சந்திக்கும்போது அவரிடம் கேட்கும் கேள்விகள் தொடர்பாக முன்னதாக ஒப்புதல் பெற வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

Tags:    

Similar News