வித் லவ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

வித் லவ் திரைப்படம் 3 நாட்களில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதுபடத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
வித் லவ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
Published on

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் 'வித் லவ்'. இப்படத்தின் மூலம் அபிஷன் கதாநாயகனாக அறிமுகமானார். அபிஷன் ஜீவிந்த் முன்னதாக தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்தின் இயக்குநர் ஆவார்.

காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் "வித் லவ்" படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

வித் லவ் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 11 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், வித் லவ் திரைப்படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார்.

படக்குழுவுடன் நடிகர் ரஜினிகாந்த் உரையாடியது, அவர்களை வெகுவாக பாராட்டியது, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com